Tag: kavithai

  • வசந்தின் கவிதை தொகுப்புகள் # ஒலி வடிவத்தில்!!

    Anchor link : https://anchor.fm/muthumeena-arumugam/episodes/Vasanths-Vasantha-Kala-Kavithaigal-e1l22jf

    Spotify Link : https://open.spotify.com/episode/6Mw6j6m9qsEa6jUHvbVFXd?si=194f85a4ae954b29
    # COPY PASTE IN BROWSER AND NJOY WITH EARPHONES/HEADSETS #

    Vasanth Kumar 
    Writer – Publisher
    6380482758 | 7305192609
    _________________________
    Oddman Quotes
    gettheunspoken
    www.oddmanonline.com

  • # புத்தகங்கள் !!

    புத்தகங்களை படிக்கவில்லை என்றாலும்

    வாங்கி அடுக்கி வையுங்கள்;

    நாளை உங்கள் பிள்ளைகளை

    அது படிக்க வைக்கும் !!

    Vasanth Kumar

    Writer – Publisher6380482758 | 7305192609

  • பனிக் கூழ் (Ice cream)

    உன்னை தொட்டவுடன்

    உரைந்ததாய் உணர்ந்தேன்…

    கண்கள் சரியாக கவனிப்பதற்குள்

    கைகள் உன்னை அள்ளி

    வாயில் போட…

    தொண்டைக்குள்ளான

     உனது பயணத்தை ஆரம்பித்து

    என் மனதை குளிரச்செய்தாய்……!!

    (Author: கும.நாச்சாள் (Nachu honey))

  • கலாமுக்கு என் கவிதை….

    கலாமுக்கு என் கவிதை….by Ramachandran Shanmugam

    உன் ஆசையாக 2020…

    எங்கள் கனவாக 2020!!!

    உன் குறிக்கோளாக இந்திய வல்லரசு…

    எங்களது கடமையாக இந்திய வல்லரசு!!!

    சாதனை நிகழ்த்தும் ஆசானாய் நீ…

    உன்னை கற்கும் மாணவனாய் நான்!!!

    ஒற்றுமையில் வேற்றுமை கண்ட நேரத்தில்…

    வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டினாய்….

    இன்றைய  இந்திய விண்வெளி வீரர்கள் ஆயிரம்…

    என்றும் விண்வெளி நாயகனாய் நீ…

    தமிழ் அறியா புது உலகில்…

    ஆற்றினாயே சொற்பொழிவு செம்மொழியில்…

    வெற்றியின் களைப்பில் உறங்கிய எங்களை….

    தோல்வியின் அருமையை உணர்த்தினாய்…

    நாட்டின் வல்லமையை அறிந்தாய்…

    அது இளைஞன் என உணர்ந்தாய்!!!

    2002ல் முதல் குடிமகன் ஆனாய் நீ…

    என்றும் எங்களின் முன்னோடியாய் நீ…

    எங்கள் தாத்தாக்களின் அடையாளமாய் காந்தி…

    என்றும் இளைஞர்களின் அடையாளமாய் நீ…

    உன் கனவை நினைவாக்கும் இத்தருணத்திலே…

    காந்தியைக் காணச் சென்றாயோ சொர்கத்திலே!!!

    கல்வியின் அவசியத்தை உணர்த்திவிட்டு…

    காமராசரை காண சென்றாயோ!!!

    -Ramachandran Shanmugam