உரையாடல்

நான் கேள்வி கேள் என்றேன் … நீ பதில் தெரியும் என்றாய்… நான் யோசித்துப்பார் என்றேன்… நீ சரியாகத்தான் இருக்கும் என்றாய்… நான் அது கெட்டது என்றேன்… நீ அதில் நன்மையும் அடக்கம் என்றாய்… நான் அறிவை தேடு என்றேன்… நீ அன்பே போதும் என்றாய்… நான் சொல்வதை கேட்டிருந்தால் உயர்ந்திருப்பாய் என்றேன்… நான் உயரத்தில் தானே இருக்கிறேன் என்றாய்… மூளைக்கும் இதயத்துக்குமான உரையாடல்… -கும. நாச்சாள்.(nachu honey)