கலாமுக்கு என் கவிதை….

கலாமுக்கு என் கவிதை….by Ramachandran Shanmugam

உன் ஆசையாக 2020…

எங்கள் கனவாக 2020!!!

உன் குறிக்கோளாக இந்திய வல்லரசு…

எங்களது கடமையாக இந்திய வல்லரசு!!!

சாதனை நிகழ்த்தும் ஆசானாய் நீ…

உன்னை கற்கும் மாணவனாய் நான்!!!

ஒற்றுமையில் வேற்றுமை கண்ட நேரத்தில்…

வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டினாய்….

இன்றைய  இந்திய விண்வெளி வீரர்கள் ஆயிரம்…

என்றும் விண்வெளி நாயகனாய் நீ…

தமிழ் அறியா புது உலகில்…

ஆற்றினாயே சொற்பொழிவு செம்மொழியில்…

வெற்றியின் களைப்பில் உறங்கிய எங்களை….

தோல்வியின் அருமையை உணர்த்தினாய்…

நாட்டின் வல்லமையை அறிந்தாய்…

அது இளைஞன் என உணர்ந்தாய்!!!

2002ல் முதல் குடிமகன் ஆனாய் நீ…

என்றும் எங்களின் முன்னோடியாய் நீ…

எங்கள் தாத்தாக்களின் அடையாளமாய் காந்தி…

என்றும் இளைஞர்களின் அடையாளமாய் நீ…

உன் கனவை நினைவாக்கும் இத்தருணத்திலே…

காந்தியைக் காணச் சென்றாயோ சொர்கத்திலே!!!

கல்வியின் அவசியத்தை உணர்த்திவிட்டு…

காமராசரை காண சென்றாயோ!!!

-Ramachandran Shanmugam

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *