
முழுவதுமாக சுற்றிப்பார்காத சமையலறையின்
முதல் பயணம்.
காணொலி காட்டும் விசயங்களை தேடி…
அறுசுவையையும் நா சுவைவுணரச் செய்த
அம்மாவின் வழியில்…
இல்லை அம்மாவைவிட மேலோங்குவேன்
என்ற குட்டி ஆணவத்தில்…
தாலிப்புசாமானையும் வாசனைசாமானையும்
தேடி சிலநேரம்…
மஞ்சத்தூளையும் மிளகாய்த்தூளையும்
தேடி சிலநேரம்…
சமையலறையில் சொதப்பிவிடுவோமோ என்ற யோசனையில் பலநேரம்…
ஒருபுறம் காய்போடலாமா என்ற சந்தேகம்!
பிறகு காய் வெந்ததா என்ற சந்தேகம்!
கண்டிப்பாக உண்ண வேண்டுமா என்ற சந்தேகம்!
காணொலி சரி தானா என்ற சந்தேகம்!
மறுபுறம் உற்சாகத்தை ஊட்டும் துள்ளல் இசையும்
கண்கவரும் காணொலி உணவும்
மூக்கைத் துளைக்கும் சமையல் வாசமும்
நானே செஞ்சது என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும்!
அன்னை கற்பிக்க முயன்று தோற்றதைகூட
கொரோனா கற்கொடுத்து விட்டது.
பொறுமையும்,ஆசையும் இருந்தால் சமையலும் எளிதுதான்!!
-கும.நாச்சாள் (nachu honey)
Leave a Reply