
Category: Poem
-
வசந்தின் கவிதை தொகுப்புகள் # ஒலி வடிவத்தில்!!
Anchor link : https://anchor.fm/muthumeena-arumugam/episodes/Vasanths-Vasantha-Kala-Kavithaigal-e1l22jf
Spotify Link : https://open.spotify.com/episode/6Mw6j6m9qsEa6jUHvbVFXd?si=194f85a4ae954b29# COPY PASTE IN BROWSER AND NJOY WITH EARPHONES/HEADSETS # 
Vasanth Kumar
Writer – Publisher
6380482758 | 7305192609
_________________________
Oddman Quotes
gettheunspoken
www.oddmanonline.com -
# புத்தகங்கள் !!
புத்தகங்களை படிக்கவில்லை என்றாலும்
வாங்கி அடுக்கி வையுங்கள்;
நாளை உங்கள் பிள்ளைகளை
அது படிக்க வைக்கும் !!
– Vasanth Kumar
Writer – Publisher –6380482758 | 7305192609
-
பனிக் கூழ் (Ice cream)

உன்னை தொட்டவுடன்
உரைந்ததாய் உணர்ந்தேன்…
கண்கள் சரியாக கவனிப்பதற்குள்
கைகள் உன்னை அள்ளி
வாயில் போட…
தொண்டைக்குள்ளான
உனது பயணத்தை ஆரம்பித்து
என் மனதை குளிரச்செய்தாய்……!!
(Author: கும.நாச்சாள் (Nachu honey))
-
கலாமுக்கு என் கவிதை….

கலாமுக்கு என் கவிதை….by Ramachandran Shanmugam உன் ஆசையாக 2020…
எங்கள் கனவாக 2020!!!
உன் குறிக்கோளாக இந்திய வல்லரசு…
எங்களது கடமையாக இந்திய வல்லரசு!!!
சாதனை நிகழ்த்தும் ஆசானாய் நீ…
உன்னை கற்கும் மாணவனாய் நான்!!!
ஒற்றுமையில் வேற்றுமை கண்ட நேரத்தில்…
வேற்றுமையில் ஒற்றுமையை நிலை நாட்டினாய்….
இன்றைய இந்திய விண்வெளி வீரர்கள் ஆயிரம்…
என்றும் விண்வெளி நாயகனாய் நீ…
தமிழ் அறியா புது உலகில்…
ஆற்றினாயே சொற்பொழிவு செம்மொழியில்…
வெற்றியின் களைப்பில் உறங்கிய எங்களை….
தோல்வியின் அருமையை உணர்த்தினாய்…
நாட்டின் வல்லமையை அறிந்தாய்…
அது இளைஞன் என உணர்ந்தாய்!!!
2002ல் முதல் குடிமகன் ஆனாய் நீ…
என்றும் எங்களின் முன்னோடியாய் நீ…
எங்கள் தாத்தாக்களின் அடையாளமாய் காந்தி…
என்றும் இளைஞர்களின் அடையாளமாய் நீ…
உன் கனவை நினைவாக்கும் இத்தருணத்திலே…
காந்தியைக் காணச் சென்றாயோ சொர்கத்திலே!!!
கல்வியின் அவசியத்தை உணர்த்திவிட்டு…
காமராசரை காண சென்றாயோ!!!
-Ramachandran Shanmugam
-
உரையாடல்

நான் கேள்வி கேள் என்றேன் …
நீ பதில் தெரியும் என்றாய்…
நான் யோசித்துப்பார் என்றேன்…
நீ சரியாகத்தான் இருக்கும் என்றாய்…
நான் அது கெட்டது என்றேன்…
நீ அதில் நன்மையும் அடக்கம் என்றாய்…
நான் அறிவை தேடு என்றேன்…
நீ அன்பே போதும் என்றாய்…
நான் சொல்வதை கேட்டிருந்தால் உயர்ந்திருப்பாய் என்றேன்…
நான் உயரத்தில் தானே இருக்கிறேன் என்றாய்…
மூளைக்கும் இதயத்துக்குமான உரையாடல்…
-கும. நாச்சாள்.(nachu honey)
-
முதல் சமையல்

முழுவதுமாக சுற்றிப்பார்காத சமையலறையின்
முதல் பயணம்.
காணொலி காட்டும் விசயங்களை தேடி…
அறுசுவையையும் நா சுவைவுணரச் செய்த
அம்மாவின் வழியில்…
இல்லை அம்மாவைவிட மேலோங்குவேன்
என்ற குட்டி ஆணவத்தில்…
தாலிப்புசாமானையும் வாசனைசாமானையும்
தேடி சிலநேரம்…
மஞ்சத்தூளையும் மிளகாய்த்தூளையும்
தேடி சிலநேரம்…
சமையலறையில் சொதப்பிவிடுவோமோ என்ற யோசனையில் பலநேரம்…
ஒருபுறம் காய்போடலாமா என்ற சந்தேகம்!
பிறகு காய் வெந்ததா என்ற சந்தேகம்!
கண்டிப்பாக உண்ண வேண்டுமா என்ற சந்தேகம்!
காணொலி சரி தானா என்ற சந்தேகம்!
மறுபுறம் உற்சாகத்தை ஊட்டும் துள்ளல் இசையும்
கண்கவரும் காணொலி உணவும்
மூக்கைத் துளைக்கும் சமையல் வாசமும்
நானே செஞ்சது என்ற மகிழ்ச்சியும், ஆனந்தமும்!
அன்னை கற்பிக்க முயன்று தோற்றதைகூட
கொரோனா கற்கொடுத்து விட்டது.
பொறுமையும்,ஆசையும் இருந்தால் சமையலும் எளிதுதான்!!
-கும.நாச்சாள் (nachu honey)
-
Choices
The crimson bright sun,
Shone too high in my sky.
The bliss of the still sea,
Seemed too tranquil to me.
The dense abandoned woods,
Made its silence ring in my ears for good.
Way too far, I see green pastures,
Way too far, I see ruminants,
Way too far, I see a world beneath.
-labored by time and beefs with uprising tense,
-yearning for their mishaps to be cleansed,
-making their own feelings traumatized, sensed.
Oh, I have a time piece that made a tick,
For I, have to choose a path quick.
I wish there was guidance
-to my questioned shoulder piece,
For my perplexity to be seized.
Life is a controversy with this dilemma on,
For me to acquire peace before the dawn!!
By Minu (Inspired from-The Road Not Taken by Robert Lee Frost)


