AIMK

‘அம்பத்தூர் ஐயன் முருகன் குழு’

உருவான கதை

(Ambattur Iyan Murugan Kuzhu History)

பழனி ஆண்டவர் – இராஜலங்காரம்

பழனி ஆண்டவர் அருளால் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பிக்கப்பட்டு அம்பத்தூரில் நடக்கும் பூஜைகளுக்கு தேவையான பூஜை பாத்திரங்கள், பந்தி பாய், சமையல் பாத்திரங்கள் போன்றவை வாங்கி வைக்கப்பட்டு அனைவருக்கும் பூஜை இல் பயன்படும் வகையில் 2006 ஆம் ஆண்டு ‘அம்பத்தூர் ஐயன் முருகன் குழு” ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இக்குழு  உறுப்பினர்கள் சிலர், அதாவது பள்ளத்தூரைச் சேர்ந்த “முத்தையா” மற்றும் கோனாபட்டை சேர்ந்த “சுரேஷ்” இருவரும் பழனி ஆண்டவர்க்கு காவடி பூஜை நடத்துவதை அறுபடை அலங்காரமாக அவர்கள் இல்லதிலோ அல்லது பொது இடத்திலோ நடத்தலாம் என நினைத்த போது அவர்களாக நடத்தாமல் மேற்படி குழு உறுப்பினர் கள் (11) அனைவரும் சேர்ந்து  அவர்களுடன் காவடி உறுப்பினர்கள் ( சில பெரியவர்கள்) சேர்ந்து அறுபடை அலங்காரமாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது.

மேற்படி பூஜையை முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு நடத்த முடிவு செய்து கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் பழனி ஆண்டவர் அருளுடன, நமது பழனி பாத யாத்திரையின் அருளாடி ஐய்யா  திரு.பழ.பழனியப்ப செட்டியார் அவர்கள் ஆசீர்வாதத்துடன் துவங்கப்பெற்றது. அவர்களும் மேற்படி பூஜையில் சுவாமி அலங்காரம் வைத்து வழிபடும் போது அதனுடன் வேல் வைத்து வழிபாடு செய்யுங்கள். அப்பொழுது நமது சுவாமி ( பழனி ஆண்டவர்) வருவார் என்று வாக்கு சொன்னார்கள். அவர்கள் வாக்குக்கு இணங்க நாங்களும் “பெரும்பேடு ஶ்ரீ செல்வமுத்துகுமரன் அபிஷேக குழுவில்” பூஜை செய்யப்படும் வெள்ளி வேல்  வைத்து பூஜை செய்ய முடிவாகியது.

வருட நிகழ்வுகள்:

2007 ஆம் ஆண்டு அம்பத்தூர் வெங்கட லக்ஷ்மி திருமண மண்டபத்தில் முதலாம் ஆண்டு பூஜையும் அன்னதானமும் மங்கள பொருட்கள் ஏலமும் நடைபெற்றது. மேற்படி பூஜையில் விநாயகர் அலங்காரம், முருகனுக்கு அறுபடை அலங்காரம், ஐய்யபனுக்கு நிழல் படம் வைத்து பூஜை நடைபெற்றது.குன்றக்குடி வேல் பண்டாரம் ஐய்யா அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இட வசதி சுருக்கமாக இருந்தது.

ஆதலால், 2008 ஆம் ஆண்டில் மஹாலக்ஷ்மி திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் விநாயகர் அலங்காரம், முருகனுக்கு அறுபடை அலங்காரம்(வெவ்வேறு), ஐய்யப்பனுக்கு அம்பலம் கட்டி அழகு பார்தோம். வழக்கம் போல் அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் ஏலம் விடப்பட்டது. மேற்படி பூஜையில் அருளாடி ஐய்யா திரு.பழ.பழனியப்பா செட்டியார் அவர்கள் கலந்து கொண்டு அனைவரையும் ஆசிர்வதித்தார்கள். மிக திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இட வசதி சுருக்கமாக இருந்தது.

எனவே, 2009 ஆம் ஆண்டு அம்பத்தூர் –  புதூரில் உள்ள “சேது பாஸ்கரா மேல்நிலை பள்ளியில்” பூஜையை நடத்தலாம் என நாங்கள் விருப்பப்பட்டு “பள்ளி நிர்வாகி – திரு.குமணன்” அவர்களை சந்தித்து  எங்கள் விருப்பத்தை தெரிவித்தோம். அவர்களும், அவர்களுடைய பள்ளி வளாகத்தில் பூஜை செய்ய மனமுவந்து சம்மதம் தெரிவித்தார்கள். பூஜையும், அன்னதானமும், ஏலமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேற்படி பூஜையில் நமது ( நகரத்தார்கள்), “குலகுருமார்கள் ஆன பாதரகுடி சுவாமிகளும்”, “துலாவூர் சுவாமிகளும்”  பூஜையில் கலந்து கொண்டு ஆசீர்வதித்தார்கள். இந்த ஆண்டு முதல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உபதேசம் செய்து வைக்கிறார்கள். பசுமாடும், கன்றும் குழு சார்பாக பழனி ஆண்டவர் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

2010 ஆம் ஆண்டு, மேற்படி அலங்காரத்துடன் மீனாக்ஷி சுந்தரேசுவர் அலங்காரம் சேர்க்கப்பட்டது. மேலும் காலை சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

2011 – 2013, வழக்கம் போல் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

2014 ஆம் ஆண்டு, வழக்கம் போல அன்னதானமும், பூஜையும், ஏலமும் நடைபெற்றது. மேற்படி விழாவில், அரண்மனை பொங்கல் ஐய்யா திரு.கும.பழனியப்பா செட்டியார் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். இந்த ஆண்டு முதல், “சிற்பக்காவடி” ஒன்று செய்து, குலுக்கல் முறையில் ஒரு காவடி அன்பரை தேர்ந்து எடுத்து பழனி ஆண்டவர் முன்னிலையில் வழங்கப்பட்டது.  எங்கள் குழு சார்பாக வஸ்த்ர தானம்( பெண்களுக்கு காளாஞ்சி- ஜாக்கெட் துணி மற்றும் மஞ்சள் குங்குமம்) 2000 பேருக்கு கொடுக்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டும், வழக்கம் போல் எல்லா நிகழ்வுகளும் நடைபெற்றது.இன்னும் இந்த பூஜையை சிறப்பாக்க பழனி ஆண்டவர் படம் போட்ட தினசரி நாள்காட்டி 2000 பேருக்கு (ஆண்கள் காளாஞ்சியாக) கொடுக்கப்படுகிறது..

வழக்கம் போல் அனைத்து நிகழ்வுகளும் 2016, 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டில், வழக்கம் போல் எல்லா அலங்காரத்துடன் ஹயக்ரீவர் அலங்காரமும், ஆஞ்சநேயர்க்கு நிழற் படம் வைத்து பூஜிக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றது.

2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று நோய் இருந்ததால், இராஜ அலங்காரம் மட்டும் செய்விக்கப்பட்டு, அவருக்கு பள்ளையம் போட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைத்து பக்த கோடிகளுக்கும் ( சுமார் 2000 நபர்கள்) புளி சாதமும், சர்க்கரை சாதமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

வருடந்தோறும் நடைபெறும் பூஜை நிகழ்வுகள்:

டிசம்பர் 24ஆம் நாள் :-

காலை –

  • பள்ளி வளாகம் சுத்தம் செய்து மஞ்சள் நீர், மற்றும் கோமியம் தெளித்தல்.
  • புண்ணியதானம் செய்தல்

மதியம் –

  • பூஜைக்கும் அன்னதானத்திற்கும் தேவையான பொருட்கள் வரவழைத்தல்.

மாலை-

  • அடுப்படி பூஜை
  • குழு உறுப்பினர்கள் அனைவரும் வயது வரிசைப்படி அரிசி அளப்பது.
  • பரங்கிக்காய் உடைப்பது
  • தோரணம் கட்டுவது, ஆண்கள் பெண்கள் காளாஞ்சி போடுதல்

இரவு –

  • சிற்றுண்டி கொடுத்தல்

டிசம்பர் 25ஆம் நாள் :-

காலை –

  • பிரம்ம முகூர்த்தத்தில் விநாயக பானை வைத்தல்
  • கோ பூஜை( பசுமாடு)
  • கஜ பூஜை( யானை)
  • அஷ்வ பூஜை ( குதிரை)
  • காலை சிற்றுண்டி
  • வேல் அழைப்பு
  • வேல் அபிஷேகம்
  • அலங்காரம் ஆரம்பம்
  • குலகுருமார்கள், மற்றும் பழனி பாதயாத்திரை ஐய்யாக்களையும் வரவேற்பது
  • இராஜலங்காரம் சுவாமிக்கு பள்ளயம் போடுதல்
  • அன்னதானம் துவங்குதல்
  • மகாதீபம்
  • மங்கலபொருட்கள் ஏலம் விடுதல்
  • ஆண்கள் காளாஞ்சி (தினசரி நாள்கட்டி, உப்பு, கல்கண்டு, தேங்காய் மூடி, வெத்தலை பாக்கு)
  • பெண்கள் காளாஞ்சி( இரவிக்கை துணி, மஞ்சள்,குங்குமம், ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட்) வழங்குதல்

மாலை –

  • அனைவருக்கும் பிரசாதம்( புளி சாதம், சர்க்கரை சாதம்) வழங்குதல்
  • பானக்க பூஜை
  • நன்றி நவில்தல்
  • அலங்காரம் பிரித்தல்

டிசம்பர் 26 ஆம் நாள் :-

காலை –

  • பள்ளியை சுத்தம் செய்து ஒப்படைத்தல்

பொது நிகழ்வுகள்:

  • 2021 ஆம் ஆண்டு முதல் முருகன் பாடல் புஸ்தகம் காளாஞ்சியில் வைத்து கொடுக்கின்றோம். மற்றும் படிக்க, ஹயக்ரீவர் கல்வி நிதி உதவியாக வழங்குகிறோம்.
  • பூஜையில் அன்னதான உண்டியலில் வரும் தொகையை குன்றக்குடியில் காவடி புறப்படும் அன்று காலை சிற்றுண்டி பக்தர்களுக்கு பள்ளத்தூர் விடுதியில் கொடுக்கபடுகிறது.

  • ·பழனியில் உள்ள குழந்தைகள் ஆசிரமத்திற்கும் , சென்னை வாழ் நகரத்தார் சங்கத்தில் அன்னதானத்திற்கு எங்களால் இயன்றதை கொடுக்கின்றோம்.

  • ·அம்பத்தூரில் உள்ள முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் போன்றவற்றிற்கு அரிசி மூட்டை மற்றும் உணவு, மற்றும் தேவையான பொருட்கள் கொடுக்கின்றோம்.
  • வருடத்திற்கு ஒரு முறை அறுபடை வீட்டில் ஒரு கோயிலுக்கு நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து எங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்து வருகிறோம்.
  • வருடா வருடம் செப்டம்பர் மாதம் அம்பத்தூரில் உள்ள “ஸ்ரீ விருபாஷேஷ்வரர் சமேத விஜயம்பிகை” கோவிலில் சுவாமி தரிசனம் செய்து புது கணக்கு ஆரம்பிக்கிறோம்.
  • அம்பத்தூரில், மேனாம்பேட்டில் உள்ள “ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில்” உள்ள கற்பக விநாயகர் ( மூலவர்) குழு சார்பாக குழு உறுப்பினர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மேற்படி “விநாயகருக்கும்” வருடா வருடம் புதுகணக்கு ஆரம்பித்தவுடன் அதை தொடர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தியன்று  குடும்பத்துடன் சென்று அபிஷேகம், அலங்காரம் செய்து வருகிறோம்.
  • கார்த்திகை 1ஆம் தேதி அன்று, அம்பத்தூர் மேனம்பேட்டில் உள்ள “அயப்பன்” கோவிலில் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்கிறோம். அதே கோவிலில் உள்ள “நாகர்” சுவாமிக்கு அபிஷேகம் செய்து வருகிறோம்.
  • நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் பெரும்பேடு சென்று “ வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ முத்துகுமாரசாமிக்கு” அபிஷேகம் செய்து அந்த ஆண்டுக்கான குழுவின் அழைப்பிதழை வைத்து பூஜை செய்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறோம்.
  • பாடியில் உள்ள “ ஶ்ரீ பிடாரி பொன்னி அம்மன்” கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சேலை சார்தி குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்து வருகிறோம். மேற்படி வராஹி திருகல்யாணத்தன்று அவர்கள் வழங்கும் அன்னதானத்திற்கு இரண்டு மூடை அரிசி கொடுக்கிறோம்.
  • வருடந்தோறும் “ தங்கவேல் முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறோம். அவர்கள் கேட்டுகொண்டதிற்கு இணங்க ஒலி பெருக்கி வழங்கினோம்.
  • அம்பத்தூரில் நடைபெறும் மகேஸ்வர பூஜையில் வருடந்தோறும் நீர் மோர் கொடுக்கின்றோம்.
  • சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமிக்கு வருடத்தில் ஒரு நாள் சென்று குழு சார்பாக அபிஷேகம் செய்து வருகின்றோம்.
  • அம்பத்தூரில் இருந்து புறப்பட்டு செல்லும் காவடி யாத்திரையில்( திருத்தணி, சிருவபுறி, பெரும்பாடு)) கலந்து கொண்டு வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து மாலை சார்த்தி பக்தர்களுக்கு இனிப்பு வழங்குகிறோம்.
  • வருடம் தோறும் குழுவின் சார்பாக ஆண் உறுப்பினர்கள் அனைவரும் பழனி சென்று பழனி ஆண்டவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அந்த வருடத்திற்கான குழுவின் வரவு செலவு கணக்குகளை அவர் முன்னிலையில் எங்களுடைய அந்த வருடத்திற்கான தலைவர் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரும் இருக்க பொருளாளர் கணக்கு வாசிப்பார். மற்றும் அனைவரும் அழகர் கோயில் சென்று கள்ளழகரையும், பதினெட்டாம் படி கருப்பரையும் தரிசனம் செய்து வருகிறோம்.
  • நமது பூஜையில், 11  பெரியவர்களுக்கு (கணவன், மனைவி- இருவருக்கும் ) வஸ்திர தானம் செய்கிறோம்.
  • குழுவின் ஆண் உறுப்பினர்கள் அனைவரும் கரந்தமலை சென்று கருப்பரை தரிசனம் செய்து வருகிறோம். மேற்படி கோவில் கூரை அமைக்கவும், தரைதளம் செப்பணிடவும் மேற்படி கோவில் நிர்வாகிகளுடன் சேர்ந்து செய்ய சுவாமி உத்தரவு கிடைத்துள்ளது.

!! அனைவரையும் அறுபடை அலங்காரத்தில் கலந்து கொண்டு ஐயன் முருகனின் அருளாசி பெற அன்புடன் வரவேற்கிறோம்!!

!! முருகனுக்கு அரோகரா!!