கருப்பர் என்றாலே தோன்றுவது பெரிய கருத்த உருவம்,பெரிய மீசையுடன்,கண்கள் பெரிதாக அரிவாளு டன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் குல தெய்வம். இவரும் அத்தகைய வகையை சேர்ந்தவர் என்றாலும் இவர் உருவ பிரதிஸ்டை சற்று வித்தியாசம். முகம் மற்றும் பெரிய அரிவாள்கள் இருபக்கமும் அமைந்து வைரவன் பட்டியில் அருள் பாலிக்கிறார். இவர் எதையும் நிறைவேற்றும் திறன் கொண்டவர்.

இவர் “முப்பலிக் கருப்பர்” என்று அழைக்கப்படுவார். ஆடு, கோழி, சேவல் என்று மூன்றையும் ஒன்றாக பலி கொடுப்பதால் இவரின் பெயர் ” முப்பலிக்கருப்பர்” என்றாயிற்று. இவருடைய சிறப்பு என்னவென்றால் என்ன வேண்டினாலும் நிறைவேற்றி வைப்பார். நல்லது மட்டும்; கெட்டதுக்கு துணை போக மாட்டார்.
நடக்க வேண்டும் என்று நினைப்பதை ஒரு காகிதத்தில் எழுதி அத்துடன் தட்சணை ( முடிந்த அளவு) வைத்து பூசாரியிடம் கொடுக்கவும். அதை அந்த நேரத்தில் சாமி பாதத்தில் வைத்து விடுவார். அதை படிப்பதற்கு என்று இருக்கும் பூசாரிகள் இரவு சாமி இடம் வாசிப்பார்கள்.அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை.
[googlemaps https://www.google.com/maps/embed?pb=!1m14!1m8!1m3!1d15710.551568175732!2d78.6578044!3d10.1286969!3m2!1i1024!2i768!4f13.1!3m3!1m2!1s0x0%3A0x6170d4abb07359bf!2sArulmigu%20Sri%20Vairavar%20Swamy%20Temple%2C%20Vairavanpatti.!5e0!3m2!1sen!2snz!4v1635149474723!5m2!1sen!2snz&w=400&h=300]“நம்பிக்கை வையுங்கள்,நிச்சயம் நடக்கும். சாமியின் அருளால் நல்லதே நடக்கட்டும்.”
Leave a Reply